பொங்கல் பரிசுத் தொகுப்பு - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அணைத்து குடும்ப அட்டைத் தாரர்களுக்கும் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த வருடம் பொங்கல் பண்டிகை வரும் பதினான்காம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.

இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் வீடு வீடாக வழங்கப்பட்டது. அதில் உள்ள தேதியில் பொதுமக்கள் தங்களின் பரிசுத் தொகுப்பை பெற்று கொள்ளலாம்.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin start pongal gift package delivery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->