கிளம்பாக்கம் பேருந்து நிலையம் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக கிளம்பாக்கத்தில் கட்டப்பட்டு உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

சென்னையில் கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. அது வெற்றியடைந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார்.

இந்த திறப்பு விழாவை முன்னிட்டு விழாவுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலந்தூர் முதல் வண்டலூர் வரை உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin today open kilambakkam bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->