ரூ.2000 கோடி கேட்டு பிரதமருக்கு CM ஸ்டாலின் கடிதம்! புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்!  - Seithipunal
Seithipunal


புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.2000 கோடி கேட்டு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 2.11 இலட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.   

சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ₹2000 கோடி ரூபாயை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்குமாறு பிரதமர் மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin letter to PM modi for Cyclone Fengal relief fund


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->