மனம் தளர வேண்டாம் மாணவ செல்வங்களே! தோல்வியடைந்த மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் சொல்லும் செய்தி! - Seithipunal
Seithipunal



பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் மனம் தளர வேண்டாம் என்று, மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நம்பிக்கை ஊட்டியுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தியில், "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நமது அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது. நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இன்று வெளியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர் அனைவரும் அடுத்தடுத்த நிலைகளுக்கு தங்களை உயர்த்தி கொண்டு,உச்சங்களை தொட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், 

தேர்வு முடிவுகள் எதுவாயினும் மாணவர்கள் நெஞ்சுரம் கொண்டு எதிர்வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொண்டு வருங்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்".

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிக்கையில், "கடந்த ஆண்டைவிட தேர்ச்சி அதிகரித்துள்ளது; ஆசிரியர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மதிப்பெண்கள் குறித்து மாணவர்களிடம் பெற்றோர்கள் கேட்க வேண்டாம்; சக மாணவர்களோடு ஒப்பிட்டு பேச வேண்டாம்". 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து செய்தியில், "12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். தேர்சி பெறாத மாணவ - மாணவிகள் தோல்வியை, வெற்றியின் ஒரு பங்குகென கருதி செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்".

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள். அவர்கள் அனைவரும் உயர் கல்வியில் சேர்ந்து உச்சத்தை தொட எனது நல்வாழ்த்துகள். 

தேர்ச்சி பெறாதவர்கள் மறு தேர்வு எழுதி வெற்றி பெற்று, இந்த ஆண்டே உயர் கல்விப் படிப்பில் சேர்ந்து சாதனைகள் புரிய எனது நல்வாழ்த்துகள்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin And TN Leaders wish students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->