விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
CM Stalin Announce for Coconut farmers
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். மாநிலத்தில் செயல்படுத்தப்படும் 67 மத்திய அரசு ஊரக வளர்ச்சி திட்டங்களை கண்காணிக்கவும், அதன் நிதி ஒதுக்கீட்டை சரியாக பயன்படுத்தவும் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
முந்தைய கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்த கோரிக்கையை முன்னிட்டு, தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் PMAYG வீட்டு திட்டத்துக்கான நிதி உயர்த்த கோரியதை மத்திய அரசிற்கு அனுப்பியுள்ளோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழக அரசு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. 2023-24 நிதியாண்டில் தேசிய சராசரியை விட அதிகமாக 59 வேலை நாட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசால் 2,118 கோடி ரூபாய் ஊதிய நிலுவை வழங்கப்படாததால், தமிழக அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமான அடையாள அட்டை திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, 51,296 மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி. அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு தடையின்றி சென்றடைய தமிழக அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
English Summary
CM Stalin Announce for Coconut farmers