காலணியுடன் பொங்கல் கொண்டாட்டம்... முதல்வர் ஸ்டாலின் எப்பொழுது நிறுத்துவார்...?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...!! - Seithipunal
Seithipunal


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் திருவாரூர் அடுத்த நத்தம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடினார். அதேபோன்று இந்த வருடம் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார்.

கடந்த ஆண்டு திருவாரூரில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியின் பொழுது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காலணி அணிந்துகொண்டு பொங்கலை கொண்டாடியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த நிலையில் நேற்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற திமுகவின் சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தின் பொழுதும் மு.க ஸ்டாலின் அவர்கள் மீண்டும் காலணி அணிந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடியது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழர்களையும் தமிழர் பண்பாட்டையும் அவமதிக்கும் செயலில் மு.க ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் காலனியை அணிந்து கொள்ளலாம் என்பதை முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக சொல்கிறாரா..? என்ற சந்தேகம் எழுகிறது.

கடவுள் நம்பிக்கை கொண்ட துர்கா ஸ்டாலின் அவர்களாவது காலணியை கழட்டி விட சொல்லி இருக்கலாம். காலணி போட்டுக்கொண்டு பொங்கல் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ஸ்டாலின்... தமிழர்களை அவமதிக்கும் செயலை நிறுத்துவாரா...?? நிறுத்தமாட்டாரா...??? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். காலணியுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin attended pongal ceremony with the shoe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->