பரபரப்புக்கு மத்தியில் எம்.எல்.ஏக்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் மக்களுடன் முதல்வர் மற்றும் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சிகள் வருகிற 11 மற்றும் 15 உள்ளிட்ட தேதிகளில் நடத்தப்பட உள்ளன. அந்தந்த தொகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

"தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த டிசம்பர் 18-ம் தேதி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமலுக்கு வந்தது. அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கவுள்ளேன். அதேபோல், அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும் சார்ந்த அமைச்சர்கள் இந்நிகழ்வை தொடங்கி வைக்கவுள்ளனர். 

மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெற உள்ள ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்களில் கலந்துகொள்ள வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கம் நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 11ம் தேதியன்று தர்மபுரியில் மக்களுடன் முதல்வர் விரிவாக்க நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறேன். வரும் 15ம் தேதியன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறேன்.

அன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்த விழாவினை தொடங்கி வைப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin letter write to MLAs for participate makkaludan stalin function


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->