மதுரை : சதிஷ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்.! தமிழக  அரசு வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும்,கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.5 லட்சமும் நிதி வழங்கப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம், விளாங்கிடி கிராமத்தில் மாநகராட்சியின் சார்பில் நடைபெற்று வந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சதீஷ் எனும் தொழிலாளி உயிரிழந்தார். 

சதீஷ் உயிரிழந்த தகவலை கேட்டு வேதனை அடைந்தேன்; சதீஷின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்பாராத விபத்தால் உயிரிழந்த சதீஷின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சதீஷின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சமும், அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய நிதியிலிருந்து ரூ.5 லட்சமும் வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin mourning to madurai sathesh death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->