கொடைக்கானலுக்கு செல்ல உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! எப்போது தெரியுமா?
cm Stalin visit kodaikanal
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தேர்தல் முடிந்து வாக்குப்பதிவு ஜூன் நான்காம் தேதி நடைபெறும் என்பதால் அரசியல் கட்சியினர் ஓய்வெடுக்க தொடங்கி உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது வெப்ப அலை அதிகமாக உள்ள நிலையில் கொடைக்கானலில் இதமான வானிலை நிலவி வருகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.
இதற்கிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகின்ற 29ஆம் தேதி கொடைக்கானலுக்கு செல்ல உள்ளார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் கொடைக்கானல் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க. ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்லவுள்ளார். வருகிற மே 4-ந்தேதி வரை அவர் கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
English Summary
cm Stalin visit kodaikanal