கோவை | சொமாட்டோ உணவு டெலிவரி வாலிபரை அடித்து உதைத்து வழிப்பறி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோவை சாய்பாபா காலனிப் பகுதியில் ஸ்ரீ விக்னேஷ் என்ற வாலிபர் சொமாட்டோ உணவு டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். 

இந்த நிலையில், அவர் தனது இரு சக்கர வானத்தில் சென்றுகொண்டிருந்த போது அவரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது‌‌. மேலும், விக்னேஷை ரயில்வே டிராக் பகுதிக்கு அழைத்துச் சென்று, முந்திச் செல்கிறாயா என கேட்டு கருங்கற்களால் அடித்துள்ளனர்.

இதன் பின்னர், அவரிடம் இருந்த உடமைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் அவருக்கு தலை, கண் மற்றும் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவர் நான்கு தையல் போடப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் குறித்து சாய்பாபா காலனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், வழிப்பறி கொள்ளையர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Somato food delivery boy beaten up and robbed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->