வெடித்தது அடுத்த சர்ச்சை! சனாதன ஒழிப்பு பற்றி பேச மாணவர்களுக்கு அழைப்பு!
College principal invited students to come and talk about Sanatana abolishment
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான அண்ணாதுரையின் பிறந்தநாள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முழுவதும் அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்த தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி சனாதன ஒழிப்பு குறித்து மாணவிகள் பேச வருமாறு அனைத்து துறை தலைவர்களுக்கும் திரு வி.க கல்லூரி முதல்வர் அழைப்பு விடுத்துள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் "இக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் சனாதான எதிர்ப்பு பற்றி தங்களின் ஆழ்ந்த கருத்துக்களை அண்ணா பிறந்தநாள் ஆன செப்டம்பர் 15 அன்று மாலை 3 மணி அளவில் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என திரு வி கா கல்லூரி முதல்வர் ராஜாராமன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த கருத்தரங்கில் திராவிட கழகத் துணைப் பொதுச் செயலாளர் மதுவந்தனை கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சனாதன தர்மத்திற்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் தற்போது அரசு கல்லூரி மாணவிகளை சனாதன ஒழிப்பு குறித்து பேச சொல்லி அவர்கள் மத்தியிலும் மதத்தின் பெயரால் பிளவு ஏற்படுத்தும் வகையில் இந்த சுற்றறிக்கை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
English Summary
College principal invited students to come and talk about Sanatana abolishment