பரங்கிமலை மாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்.! - Seithipunal
Seithipunal


பரங்கிமலை: சென்னை  ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த செயலை செய்த இளைஞர் பெண்ணை ரயில் தண்டவாளத்தில் தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடு உள்ளார்.

தண்டவாளத்தில், சிக்கிய அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு தப்பியோடிய சதீஷ் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் கைது செய்தனர். இதனிடையே ஓடும் ரயில் முன்பு மகள் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக இன்று காலை தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த விகாரத்தில் திடீர் திருப்பமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College student death in train Father suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->