தோசை சாப்பிட்டுவிட்டு தூங்கிய கல்லூரி மாணவர் - நள்ளிரவில் நடந்த கொடூரம்.!
college student died for breething problam after ate dosa
தோசை சாப்பிட்டுவிட்டு தூங்கிய கல்லூரி மாணவர் - நள்ளிரவில் நடந்த கொடூரம்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் வினோத் கண்ணன். இவர் மும்பையில் பணிபுரிந்து வருவதால் அவரது குடும்பத்தினரும் மும்பையிலேயே வசித்து வருகின்றனர்.
ஆனால், வினோத் கண்ணனின் மகன் ரிஷி ஆச்சார்யா மட்டும் திருநெல்வேலியில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்த நிலையில், ரிஷி ஆச்சார்யா நேற்று இரவு தனது உறவினர்களோடு அமர்ந்து தோசை சாப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் ரிஷி தனது அறைக்குத் தூங்குவதற்காக சென்றுள்ளார். இதையடுத்து ரிஷி ஆச்சார்யாவுக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அவரது உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
college student died for breething problam after ate dosa