சோகம் - ரெயிலில் இருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!
college student died for fell down train in chennai
காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் பகுதியை சேர்ந்த விஷ்வா என்ற வாலிபர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு தினமும் திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்து சென்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் விஷ்வா மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, தாம்பரம் அருகே கூட்ட நெரிசலால் எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இந்த விபத்தில் மாணவர் விஷ்வாவுக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த விஷ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் கூட்ட நெரிசலில் சிக்கி விஷவா உயிரிழந்தாரா? அல்லது யாராவது கீழே தள்ளி விட்டார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student died for fell down train in chennai