ஆன்லைனில் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை - மனஉளைச்சலில் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.!
college student sucide for father reprimanded in avadi
ஆன்லைனில் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை - மனஉளைச்சலில் கல்லூரி மாணவன் எடுத்த விபரீத முடிவு.!
சென்னையில் உள்ள ஆவடி அருகே விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி மகன் தினேஷ் குமார். பத்தொன்பது வயதுடைய இவர் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் தினேஷ் குமார் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து கொண்டு செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளார். இதைப்பார்த்த தினேஷ் குமாரின் தந்தை குருமூர்த்தி அவரை கண்டித்துள்ளார்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த தினேஷ் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் மகன் எழுந்து வராததால் சந்தேகமடைந்த குருமூர்த்தி அவரை கூப்பிடுவதற்காக அறைக்குச் சென்ற போது மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து குருமூர்த்தி உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் விரைந்து வந்து தினேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student sucide for father reprimanded in avadi