விடுதியில் தங்க மறுப்பு - கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.!
college student sucide in chennai
சென்னையில் உள்ள வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பகுதியைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன். இவர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி சந்தான பிரியா. இவர்களுக்கு அஸ்வந்தினி, ஆனந்தினி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில், மூத்த மகள் அஸ்வந்தினி, ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவர், மிகுந்த மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரது தங்கையான ஆனந்தினிக்கு வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. அவரை கல்லூரி விடுதியில் தங்கி படிக்க வைப்பதற்கான வேலைகளில் பெற்றோர் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, அஸ்வந்தினி தன்னையும் விடுதியில் தங்கி படிக்க வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் விரக்தி அடைந்த அஸ்வந்தினி, நேற்று முன்தினம் நள்ளிரவு தனது வீட்டின் பால்கனி பகுதியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார், அஸ்வந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
college student sucide in chennai