பீஸ் கட்ட பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு.!
college student sucide in chennai mambalam
பீஸ் கட்ட பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு.!
சென்னையில் மேற்கு மாம்பலம் திருவள்ளுர் தெருவை சேர்ந்தவர் குமரேசன் மகன் விக்னேஷ். இவர் வில்லிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் அழகுகலை பயிற்சி மையம் ஒன்றில், அழகுகலை நிபுணருக்கு படித்து வந்தார்.
இந்த நிலையில், விக்னேஷ் பயிற்சிக் கட்டணமான ரூ.20 ஆயிரத்தை தவணை முறையில் கட்டியுள்ளார். மீதி தொகையைக் கட்டுவதற்கு கால அவகாசம் தேதி நெருங்கியதால் விக்னேஷ் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, விக்னேஷின் பெற்றோர் உறவினர்களிடம் பண உதவிக் கேட்டும் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த விக்னேஷ், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே, விக்னேஷின் நண்பர் நவீதாஸ் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் விக்னேஷின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார்.
ஆனால், கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு, விக்னேஷ் தூக்கில் தொங்கியபடி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த நவீதாஸ் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் படி விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் இந்த சம்பவம் குறித்து, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
college student sucide in chennai mambalam