கல்லூரி மாணவர் தற்கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!
college student sucide in chennai thiruvotriyur
கல்லூரி மாணவர் தற்கொலை - விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!
சென்னையில் உள்ள திருவொற்றியூர் அப்பர் சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் ராபர்ட் மகன் ஆண்ட்ரூஸ். தனியார் கல்லூரியில் இளங்கலை வேதியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார்.
இதையறிந்த அவரது தாய் ஆண்ட்ருஸைக் கண்டித்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், நண்பர்களிடம் செல்போன் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக ஆண்ட்ருஸ் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஆண்ட்ரூஸ் தற்கொலை செய்து கொண்ட படி தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
உடனே போலீஸார் ஆண்ட்ரூஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் திட்டியதால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student sucide in chennai thiruvotriyur