கள்ளக்குறிச்சி || சாதிப்பெயரை சொல்லி திட்டிய ஆத்திரம் - கல்லூரி மாணவி எடுத்த விபரித முடிவு.!
college student sucide in kallakurichi
கள்ளக்குறிச்சி || சாதிப்பெயரை சொல்லி திட்டிய ஆத்திரம் - கல்லூரி மாணவி எடுத்த விபரித முடிவு.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்திதா. இவர் புதுவை லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் விடுதியில் தங்கி ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், நந்திதா நேற்று விடுதி அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த சக தோழிகள் நந்திதாவை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நந்திதா கரசானூரை சேர்ந்த ராஜேஷ் என்ற வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதையறிந்த நந்திதாவின் பெற்றோர், தனது மகளையும், ராஜேஷையும் கண்டித்துள்ளனர். அதன் பின்னர் நந்திதா, ராஜேஷுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
இதனால் காதல் ஜோடிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ் சாதியை சொல்லி திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த நந்திதா, தான் படிக்கும் கல்லூரி ஆய்வகத்தில் இருந்து விஷ ஊசியை எடுத்து வந்து விடுதியில் தனக்கு தானே செலுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என்றுத் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் விடுதியில் சோதனை செய்ததில் நந்திதா தற்கொலைக்கு முன்பு எழுதியுள்ள கடிதம் ஒன்று சிக்கியது. அதில், "காதலன் ராஜேஷ் திட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சாதி பெயரைச் சொல்லித் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
college student sucide in kallakurichi