கன்னியாகுமரி : கல்லூரிக்கு போகாமல் கட் அடித்த மகனை தட்டிக்கேட்ட தந்தை - ஆத்திரத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கல்லூரிக்கு போகாமல் கட் அடித்த மகனை தட்டிக்கேட்ட தந்தை - ஆத்திரத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரியான்விளை பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் முகேஷ். இவர் நாகர்கோவிலில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். ஆனால், முகேஷ் கல்லூரிக்குச் செல்லாமல் வகுப்பை புறக்கணித்து விட்டு வெளியில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதுகுறித்த தகவல் முகேஷின் தந்தை குமாருக்குத் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் கல்லூரிக்குச் செல்லாமல் வகுப்பைக் கட் அடித்தது ஏன்?. படிக்க விருப்பம் இல்லை என்றால் ஒரு வேலைக்குப் போகலாமே? என்று முகேஷை கடுமையாகத் திட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முகேஷ், வீட்டில் தென்னை மரத்திற்கு வைக்கும் விஷ மாத்திரைகளை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து வாந்தி எடுத்துள்ளார். இதையறிந்த முகேஷின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி முகேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student sucide in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->