100 நாள் வேலை திட்டத்தில் மோசடி.. ரூ.48 லட்சம் அபேஸ்.. ஊராட்சி மன்ற தலைவி மீது வழக்கு..!!
Congress panchayat president Rs49 laks defrauding 100day works scheme
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்ற தலைவியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூர்ணிமா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்து வருகிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நபர்களுக்கு முறைகேடாக வேலை அட்டை வழங்கியுள்ளார்.
மொத்தமாக 1878 பேருக்கு வழங்கப்பட்ட அட்டையில் 319 பேர் தகுதியற்ற நபர்களாவர். இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களாகவும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர் பெயரிலும் 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நூதன முறையில் தகுதியற்றவர்களுக்கு அட்டை வழங்கி அரசு பணத்தை நூதன முறையில் அபேஸ் செய்துள்ளார். இதுபோன்று கடந்த சில ஆண்டுகளாக நடந்த மோசடியில் அரசுக்கு சுமார் 49 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற பயனாளர்களின் பட்டியலை ஆராய்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மோசடி நடந்திருப்பது உறுதியானதோடு ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா இதனால் பலன் அடைந்திருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி பூர்ணிமா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
English Summary
Congress panchayat president Rs49 laks defrauding 100day works scheme