நான் டெப்டி CM-ஆ! போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்த செல்வப்பெருந்ந்தகை!
Congress Tamilnadu Selvaperundhagai Poster
"ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற வாசகத்துடன் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் ஒரு போஸ்டர் வைக்கப்பட்டிருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த போஸ்டரை வெளியிட்டவர் மாநில செயலாளர் ஷெரீஃப் எனக் கூறப்படுகிறது. அவரின் செயலுக்கு எதிராக செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகவும் ஒற்றுமையுடனும் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு இப்படியான போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது என்பது கவலையளிக்கிறது.
இந்த முயற்சி திட்டமிட்டதாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான செய்தி பரவக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இதுபோன்ற தனிச்செயல்களால் கட்சியின் மதிப்பு பாதிக்கப்படக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Congress Tamilnadu Selvaperundhagai Poster