தொழிலாளர் நலத்துறை மசோதா குறித்து நாளை தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை.!
consultation with labor unions tomarrow of labor welfare bill
தொழிலாளர் நலத்துறை மசோதா குறித்து நாளை தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை.!
தமிழக சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மசோதா குறித்து, அமைச்சர்கள் முன்னிலையில் தொழிற்சங்கங்களுடன், நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக சட்டசபையில் தொழிற்சாலைகள் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இதன் முக்கிய அம்சங்கள், முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.
இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதனால், நாளை மதியம் மூன்று மணிக்கு, தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களும் கலந்துகொள்கின்றன. அப்போது தொழிற்சங்கங்கள் எழுப்பிய கருத்துக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
consultation with labor unions tomarrow of labor welfare bill