ரஜினியின் பேச்சால் மீண்டும் சர்ச்சை?......அமைச்சர் துரைமுருகனுடன் எனது நட்பு தொடரும் - ரஜினிகாந்த்! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து கேட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர்  துரைமுருகன்  கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவர் கூறியதாவது, மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது என்றும், அதை மறந்து விட்டு  ரஜினிகாந்த் பேசுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி, அமைச்சர் துரைமுருகன் கூறியதில் வருத்தம் இல்லை  என்றும், அவர்  எனது நீண்ட கால நண்பர் என்று கூறினார். மேலும், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்த அவர், துரைமுருகன் உடனான எனது நட்பு எப்போதும் போல தொடரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Controversy again due to Rajinis speech My friendship with Minister Duraimurugan will continue Rajinikanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->