வேங்கைவயல் விவகாரம் - நான்கு சிறுவர்களை 14 ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வேங்கைவயல் விவகாரம் - நான்கு சிறுவர்களை 14 ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் பட்டியலின குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கில், எந்த விதமான சாட்சிகளும் இல்லாத நிலையில், நீா்த் தேக்க தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மனிதக் கழிவின் மரபணுவுடன், 119 பேரின் மரபணுவையும் ஒப்பிட்டுப் பாா்க்க சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்தனா்.

இந்த முடிவின் படி, ஏற்கெனவே 21 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வேங்கைவயலைச் சோ்ந்த ஒரு சிறுவன் மற்றும் இறையூரைச் சோ்ந்த மூன்று சிறுவா்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்து, மாவட்ட எஸ்சி-எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரி ஏற்கெனவே மனு செய்திருந்தனா்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி எஸ். ஜெயந்தி, பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவோா் சிறாா்கள் என்பதால், அவா்களின் பெற்றோரின் கருத்தை அறிய வேண்டியது அவசியம். ஆகவே, சிறாா்களின் பெற்றோரை புதன்கிழமை (அதாவது இன்று) நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவின் படி, வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இருப்பினும், இந்த விசாரணையை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் வருகிற14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.மேலும், வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்களையும் ஜூலை 14 ஆம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corut order to four childrens produce coming 14th for vengai vayal issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->