சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.!
court custody extend to savukku sangar
பிரபல யூடியூபர் சவுக்குசங்கர் மீது பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக எழுந்த புகாரின்பேரில் கோவை போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல், கடந்த 4-ந்தேதி தேனியில் தங்கி இருந்த அவர் மீது கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்த கடந்த 20-ந்தேதி மதுரை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன் படி, போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், அவரை மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தேனி மாவட்ட போலீசார் ஆஜர்படுத்தனர். அப்போது அவரிடம், "காவலில் விசாரணை நடத்திய போலீசார் உங்களை துன்புறுத்தினார்களா?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சவுக்கு சங்கர், விசாரணையின் போது போலீசார் எந்த துன்புறுத்தலிலும் ஈடுபடவில்லை. வக்கீல்கள் என்னை சந்திக்க அனுமதித்தனர்" என்று தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி அவரது நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். அதன் பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் வேனில் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
English Summary
court custody extend to savukku sangar