கறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு நீதிமன்ற காவல்! நீதிபதி அதிரடி உத்தரவு!
Court Custody till july 30 Karuppar Koottam Surenthiran
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் சுரேந்திரனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கறுப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனலில் தமிழ் கடவுள் முருகப் பெருமானை நினைத்து பாடப்பட்ட கந்தசஷ்டி கவசத்தினை ஆபாசமாக விமர்சித்ததையடுத்து கடுமையான எதிர்ப்பு உருவானது. இதனையடுத்து கருப்பு கூட்டத்தின் ஊழியர்கள் தலைமறைவானார்கள்.
இந்த நிலையில் செந்தில் வாசன் என்பவர் வேளச்சேரியில் கைது செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சுரேந்திரன் என்பவர் நேற்று சரணடைந்தார்.
இந்த நிலையில் சென்னை கொண்டு வரப்பட்ட அவரை, சென்னை ராயபுரத்தில் உள்ள நீதிபதி ரோஸ்லின் துரை இல்லத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். விசாரித்த நீதிபதி சர்ச்சை வீடியோ விவகாரத்தில் ஜூலை முப்பதாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Court Custody till july 30 Karuppar Koottam Surenthiran