அவதூறு வழக்கு - நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு உத்தரவு.!
court order to assembly speaker appavu for admk case
அவதூறு வழக்கில் வருகிற செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப எம்.பி.-எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சு அ.தி.மு.க. வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கூறி சபாநாயகருக்கு எதிராக, அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, வழக்கின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தர விட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி இந்த வழக்கு விசாரணை தொடர்பாக செப்டம்பர் 9-ந் தேதி நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
English Summary
court order to assembly speaker appavu for admk case