ரசாயனம் கலந்த.. விநாயகர் சிலை தயாரிப்புக்கு தடை? நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!
Court ordered to monitor chemical mixed ganesha idols manufacturing
தமிழகத்தில் விநாயகர் சிலை ரசாயன கலப்படம் இன்றி தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலை தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே செய்ய வேண்டும். ரசாயனம் கலந்த சிலைகளை ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த அரசு பாண்டி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக தயாரிக்கப்படும் ரசாயன கலப்பு சிலைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ள நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Court ordered to monitor chemical mixed ganesha idols manufacturing