நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் மனு - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!
court postpond manoor alikhan son bail case
சென்னை முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் கைது செய்யப்பட்டனா். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை கடத்தி வந்து கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிற்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அலிகான் துக்ளக் ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'போதைப்பொருட்கள் எதுவும் தன்னிடம் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தார். இந்த மனு சென்னை போதைப்பொருள் கடத்தல் சிறப்பு கோர்ட்டில் இன்று காலை விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரணை செய்த சென்னை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு நீதிமன்றம் மனு மீதான விசாரணையை வருகிற 26-ந் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
court postpond manoor alikhan son bail case