மூதாட்டியை கூட விட்டு வைக்காத கொடூரர்கள்!!! கோவையில் கூட்டு பலாத்காரம்!!! நடந்தது என்ன?
cruel people Gang harassment old woman Coimbatore
கோவை மாவட்டம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி ஒருவர் .தனியாக வசிக்கும் இவர், கூலி வேலை செய்து பிழைப்பு வருகிறார். இந்த மூதாட்டியின் வீடு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.இதில் நேற்று அதிகாலையில் மூதாட்டி வீட்டில் இருந்தபோது அங்கு வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் திடீரென அவரை தாக்கி கீழே தள்ளினர்.
பின்னர் மூதாட்டி என்றும் பாராமல் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கதறி துடித்தார்.இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.உடனே அந்த வடமாநில தொழிலாளர்கள் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை சுற்றி வளைத்து அக்கம்பக்கத்தினர் பிடித்ததில் ஒருவர் தப்பி ஓடினார். மீதமுள்ள 2 பேரை பிடித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் 2 பேரையும் காவலர்கள் கைது செய்ததுடன் தப்பி ஓடிய நபரையும் காவலர்கள் தேடிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cruel people Gang harassment old woman Coimbatore