கடலூர்: வாய்க்காலில் நீந்தி சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், வீரசோழபுரம் கிராமத்தில் பாலம் வசதி இல்லாததால் உயிரிழந்தவர்களின் சடலங்களை வாய்க்காலில் நீந்தி கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவல நிலை குறித்த செய்தி மற்றும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், வீரசோழபுரம் கிராமத்தில் மயானத்திற்கு வாய்க்காலை கடந்து செல்ல ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாலம் அமைக்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆழங்காத்தான் ஊராட்சி, வீரசோழபுரம் குக்கிராமத்தில் மயானத்திற்கு வடக்கு ராஜன் வாய்க்காலை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேற்படி வாய்க்காலில் தற்சமயம் நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தினால் சடலத்தினை அடக்கம் செய்ய வாய்க்காலை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாக 07.11.2024 அன்று ஊடகங்களில் செய்தி வரப்பெற்றது.

மேற்காணும் குக்கிராமத்தில் வடக்கு ராஜன் வாய்க்கால் கரையோரத்தில் இறந்தவர்களின் சடலத்தினை அடக்கம் செய்யும் வழக்கம் கொண்டுள்ளனர். இதற்காக கடந்த 2023-2024 நிதியாண்டில் ரூ.13.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. தற்போது மற்ற பகுதி மக்கள் சுமார் 500 மீ தொலைவில் உள்ளவர்களின் பயன்பாட்டிற்கேற்ப புதிதாக நடைபாலம் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக புதிய நடைபாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தற்சமயம் மேற்படி வாய்க்காலில் நீர் வரத்து இருக்கின்ற காரணத்தினால் மயானத்திற்கு செல்ல ஏதுவாக தற்காலிகமாக பாலம் உடனடியாக அமைக்கப்படவுள்ளது" என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Collector Bridge Construction Fund Allocation dead body


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->