கடலூரில் இரு இளைஞர்கள் கொன்று புதைத்த கொடூரம்! 20 நாள் களைத்து வெளியான உண்மை!
Cuddalore Neiveli Youngsters murder case
கடலூர் மாவட்டம், எம்.புதூர் மற்றும் டி.புதூர் பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் அடுத்தடுத்து காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஜனவரி மாதம் இறுதியில் அப்புராஜ் என்ற இளைஞரும், பிப்ரவரி மதம் தொடக்கத்தில் சரண்ராஜ் இளைஞரும் காணாமல் போனதாக பெற்றோர்கள் தனித்தனியாக புகார் அளித்திருந்தனர்.
கடந்த 20 க்கு மேற்பட்ட நாளாக போலீசார் இருவரையும் தேடிவந்த நிலையில், இந்த இளைஞர்களின் நபர்களே இவர்களை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகிய இரு இளைஞர்களும் நெய்வேலி அடுத்த மண்மேடு பகுதியில் கொன்று புதைக்கப்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொன்று புதைக்கப்பட்ட அப்புராஜ் மற்றும் சரண்ராஜ் ஆகியோரின் உடல்களை தோண்டி எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் இதுவரை தகவல் தெரிவிக்காத நிலையில் , இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Cuddalore Neiveli Youngsters murder case