கடலூர்-சிதம்பரம் இடையே தனியார் பேருந்துகள் இயங்காது - பயணிகள் கடும் அவதி.! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டை பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்று முதல் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாகவும், அதற்கான கட்டண விவரங்களையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.

இது குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சாலை பணி முழுமை பெறாமல் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது. மேலும் கட்டண விகிதம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்தை முன்னிட்டு கடலூர்-சிதம்பரம் இடையே தனியார் பேருந்துகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் தேசிங்குராஜன் பேசுகையில், "கொத்தட்டை சுங்கச்சாவடியில் ஐம்பது முறை சென்றால் ஒரு மாத கட்டணம் ரூ.14 ஆயிரத்து 90 அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வட்டார போக்குவரத்து அதிகாரி நிர்ணயித்த கால நேர அட்டவணைப்படி ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை சட்டப்படி பேருந்துகள் இயங்கி வருகிறது. இப்படி என்றால் 5 நாளில் ஒரு மாத கணக்கு தீர்ந்து விடும். அதனால், இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் ஓடாது.

இந்த பேருந்துகளை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம். இது குறித்து சிதம்பரம் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தின் தீவிரம் குறித்து அறிவிப்போம் என்றுத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளானார்கள். அவர்கள் அரசு சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் சென்றனர். கூட்டம் அதிகமானதால் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல இயலாமல் தவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore to chithambaram private bus not run for strike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->