ஆடி காரில் வந்தால் பல் இளிப்பதும், கஞ்சிக்கு வழியில்லாவதன் பல்லை பிடுங்குவதும்..! தமிழக போலீசாரின் மோசமான நிலை - ஒரு பத்திரிகையாளரின் ஆதங்கம்! - Seithipunal
Seithipunal


அம்மசமுத்திரம் போலீசாரின் கொடூர முகத்தை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்திய 'தி நியூ இந்தியன் எஸ்பிரெஸ்' செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் தினகரன் ராஜாமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார். அவரின் அந்த பதிவு தமிழக போலீசாருக்கு சவுக்கடி என்று சொன்னால் மிகையாகாது.

"ஏழை குற்றம் மற்றும் பணக்கார குற்றம்" என்ற தலைப்பில் தமிழகத்தின் நிலையை அவர் விவரித்து உள்ளார். அதன் விவரம் பின்வருமாறு : 

பல்வீர் சிங் மற்றும் பாப்பாக்குடி காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் 19-வயது வனராஜாவுக்கு அம்மா அப்பா கிடையாது. அவர்களது உறவினர்களும் வறுமையின் பிடியில். 20-வயது பட்டியலின இளைஞர் மகாராஜாவின் தந்தை, அவர் இறக்கும் ஏப்ரல் 8 வரை அரசு மருத்துவமனையையே நம்பி இருந்தார். மகாராஜாவும் அவரது அண்ணனும் கல் குவாரியில் வேலைசெய்து குடும்பத்தை காப்பாற்றுகின்றனர். 

அம்பாசமுத்திரத்தில் தாக்கப்பட்ட அண்ணன் தம்பிகள், எவரும் எளிதில் தொட துவங்கும் கறிக்கடை தொழில் நடத்தி பிழைப்பவர்கள். காவலர்களுக்கு ஆதரவாக பிறழ்சாட்சியாக மாறிய சூர்யாவின் ஓட்டு வீட்டினை கூடு என்றுதான் கூறமுடியும். அவரது வீட்டிற்கு இருமுறை சென்றுள்ளேன். 

அவருக்கு அப்பாவும் கிடையாது. மறுபுறம் படுத்த படுக்கையாக தாத்தா. குடும்ப சொத்து பிரச்சனையில் இருப்பதால், வேத நாராயணன் விக்ரமசிங்கபுரத்தில் ஆட்டோ ஓட்டி பிழைக்கிறார். நான்கு பற்கள் பிடுங்கப்பட்ட சுபாஷின் பாட்டி, மிகவும் சுமாரான சேலையை கட்டிக்கொண்டு சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அம்பாசமுத்திரத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் காவல்நிலைய சித்திரவதைக்கு உள்ளாகுபவர்கள் இது போன்றவர்கள்தான் (easy target). கடந்த சில ஆண்டுகளில் ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடந்த காவல்நிலைய சித்திரவதைகள் குறித்த செய்திகளை எங்களது பத்திரிகை வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலும் அல்லது அனைவருமே எளிய மக்கள்தான். பணமிருப்பவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்குள்ளவர்கள் பாதிக்கப்படுவது மிகவும் அரிது. அவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதே நமது கருத்து...

ஸ்ரீபெரும்புதூரில் கற்பழிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் ஜனவரி 14ல் காலில் சுடப்பட்டனர். அதற்கு முந்தைய நாள் சென்னையில் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். சுடப்படவில்லை. அதற்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு கட்சிக்காரர் பெண் காவலரையே பாலியல் தொந்தரவு செய்தார். அவரும் சுடப்படவில்லை. 

திருச்சியில், ஒரே நாளில், ஒரு பேராசிரியர் தாக்கப்படுகிறார் & அமைச்சரின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்களால் காவல்நிலையத்திலேயே  ஒரு காவலர் தாக்கப்படுகிறார். முதலாவது குற்றத்தை செய்தவரின் கால் உடைபடுகிறது/உடைக்கப்படுகிறது. தாக்கப்பட்டவர் காவலரே  ஆனாலும், இரண்டாவது குற்றம் செய்தவரின் சுண்டுவிரல் நகத்தை கூட உடைக்க முடியவில்லை.

ஆக, தமிழக காவல்துறையை பொறுத்தவரை, குற்றத்தின் தீவிரம் அதனை செய்யும் ஆளை பொருத்ததா?

ஒருவேளை, அம்பாசமுத்திரத்தில் பல் உடைக்கப்பட்டவர்கள், ஆடி காரில் வலம்வருபவர்களாகவோ, அரசியல்வாதிகளின் புதல்வர்களாகவோ இருந்திருந்தால், பலவீர் சிக்குகள் அவர்களை பல்லிளித்து வழியனுப்பியிருப்பார்களோ?
கஞ்சிக்கு வக்கற்றவனை கஸ்டடியில் வைத்து, நான்குபேரை பிடிக்க சொல்லி, கட்டிங் பிளையரால் பல்லை பிடுங்குவது வீரமில்லை.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Custodial Torture Police Reform Ambasamudram Balveer Singh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->