நயன்தாரா குழந்தை பெற்றது தான் திமுகவுக்கு முக்கியம்! கோவை சம்பவம் முக்கியம் இல்ல! - சி.வி சண்முகம்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அசூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் கலந்து கொண்டார். மரம் நடும் விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் என்ன செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் "தமிழகத்தில் திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் தீவிரவாதம் தலை தூக்கி விடுகிறது. கோவை வெடிகுண்டு விபத்து என்பது இதற்கான முக்கிய எடுத்துக்காட்டு. ஆனால் அதைப் பற்றி சிந்திக்காமல் மக்களிடையே உள்ள அச்சத்தை போக்காமல் இந்த அரசு முன்னுக்கு பின் முரணாக பேசி வருகிறது. திமுக இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

கோவை வெடி விபத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்காமல் இந்த அரசு ஆதிதீவிரமாக கவனம் செலுத்தி நயன்தாரா சட்டத்திற்கு உட்பட்டு திருமணம் செய்துதான் குழந்தை பெற்றாரா என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறது" என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cv Shanmugam said People not important for DMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->