சைபர் குற்ற சம்பவங்களில் ரூ.772 கோடி முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தகவல்..! - Seithipunal
Seithipunal


சைபர் குற்ற சம்பவங்களில் ரூ.772 கோடி முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது குறித்து கூறியுள்ளனர். அதில், 2024-ஆம் ஆண்டு 'சைபர் கிரைம்' உதவி எண் கட்டுப்பாட்டு அறைக்கு 02 லட்சத்த அழைப்புகள் வந்தது. இதில் நிதி மோசடி குறித்து 34 ஆயிரத்து 392 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், 02 லட்சத்து 68 ஆயிரத்து 875 அழைப்புகள் வந்தது என்றும், இதில் நிதிமோசடி குறித்து 34 ஆயிரத்து 392 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சைபர் மோசடி சம்பவங்களில் மக்கள் இழந்த ரூ.1,673.85 கோடியில் ரூ.771.98 கோடி முடக்கப்பட்டது.

இதில் ரூ.83.34 கோடி பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 838 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதில் 34 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 19,359 போலி சிம்கார்டுகள்,54 போலி இணையதளங்கள் உள்பட பல மோசடி தளங்கள் முடக்கப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் "திரை நீக்கு" நடவடிக்கை மூலம் கடந்த டிசம்பர் 06 முதல் 08-ந் தேதி வரையில் தமிழகத்தில் 76 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இணைய பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும் வருகிற 29-ந்தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள வி.பி.சிங் சிலையில் இருந்து போர் நினைவிடம் வரை சைபர் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cyber ​​​​crime police have reported that Rs 772 crore has been blocked in cyber crime incidents


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->