சென்னையில் மையப் பகுதியில் தீவிர மழை தொடரும் - பிரதீப் ஜான்! - Seithipunal
Seithipunal


ஃபெஞ்சல் புயல் இன்று இரவு முதல், நாளை அதிகாலைக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் கொடுத்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் எந்த அளவு தாமதமாக கரையை கடக்கிறதோ, அந்த அளவுக்கு மழை அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். 

இன்று மாலைக்கு பின் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும், மரக்காணம் - மகாபலிபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அடுத்த 18 மணி நேரம் வரை மழை நீடிக்கும் என்றும், கடலுக்கு மேலே புயல் நிலை கொண்டுள்ளதால் மழை மேகங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும்.

மழை மேகங்கள் உருவாகுவதால் சென்னையில் மையப் பகுதியில் தீவிர மழை தொடரும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone Chennai Heavy rain alert Pradeep John


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->