புயல் கனமழை: சென்னையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி! சுரங்கப்பாதையில் சிக்கி ஒருவர் பலி!
Cyclone Chennai heavy rain three people death
சென்னையில் மின்சாரம் பாய்ந்து மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
காலையில், பிராட்வேயில் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் மின் கம்பி அறுந்து விழுந்து சக்திவேல் என்பவர் உயிரிழந்துள்ளார்.
விஜயநகர் 2வது தெருவில், மின் கம்பி அறுந்து விழுந்து உள்ளது. எதிர்பாராத விதமாக அந்த வழியாக நடந்து சென்ற சக்திவேல் என்பவர் மின்சார கம்பியை மிதிக்கவே அவர் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சற்று முன்பு சென்னை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் இசைவாணன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்
உயிரிழந்த இசைவாணனின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
English Summary
Cyclone Chennai heavy rain three people death