சர்ச்சை வீடியோ: பாவம் இல்லையா? ஆளே வராத இடத்தில் தூய்மை பணியா? - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை மரக்காணம் அருகே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது ஃபெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளதாவும், மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதையை கொட்டும் மழையில் தூய்மைப்பணியாளர்கள் இன்று காலை தூய்மைப்படுத்துகிற காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புயல் கனமழையில் யார் கடற்கரைக்கு வரப்போகிறார்? மாற்றுத்திறனாளிகள் எப்படி இந்த நேரத்தில் வருவார்கள் என்பது கூட தெரியாமல், தூய்மைப்பணியாளர்களை ஏன் இப்படி பனி செய்ய அறிவுறுத்தியுள்ளார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyclone Chennai Marina Beach Cleaning work


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->