மாமியாரை கொலை செய்து விட்டு மருமகள் செய்த செயல்..! - Seithipunal
Seithipunal


மாமியாரை கொலை செய்துவிட்டு மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் தைலம்மாள். இவர் தனது மகனுடன் வசித்து வந்தார். சம்பவதன்று அவரது மருமகள் செல்விக்கு இடையில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த செல்வி மாமியாரை சரமாரியாக தாக்கினார்.

இதில், ரத்தகாயங்களுடன் கிடந்த அவரை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த செல்வி தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daughter in Law Kills Mother In Law and Committed Suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->