கடலூர்: ஏரியில் மிதந்த அழுகிய நிலையில் ஆண் சடலம்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மிதந்த அழுகிய ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ரங்கநாதபுரம் ஏரியில் துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று நீரில் மிதந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏரியில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த நபர் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்தவர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து ஏரியில் வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dead body of man floating lake in Cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->