விருதுநகர் || பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியில் அருகே காமராஜர்புரத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று காலை 10 மணி அளவில் தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அதன் படி அங்கு, பட்டாசு உற்பத்திக்கான மருந்து கலவை தயார் செய்தபோது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் இரண்டு அறைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் விருதுநகர் தீயணைப்பு படையினர் மற்றும் வச்சக்காரப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கன்னிசேரிபுதூரைச் சேர்ந்த காளிராஜ், முதலிப்பட்டியை சேர்ந்த வீரக்குமார் உள்ளிட்ட 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். 

அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் ஒவ்வரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் உரிமையாளர் முருகேசன், குத்தகைதாரர் ஒண்டிப்புலியை சேர்ந்த முத்துக்குமார், ஆலை மேலாளர் கருப்பசாமி உள்ளிட்ட மூன்று பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death troll increase in viruthunagar firecrackers factory fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->