தீபாவளி பண்டிகை : உச்சத்தை அடைந்த ஆம்னி பேருந்து கட்டணம்.! அதிர்ச்சியில் பயணிகள்..! - Seithipunal
Seithipunal


வருகிற 24-ந் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை மக்களின் நலன் கருதி விடுமுறை விடுவதற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

தீபாவளிக்கு முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை என்பதால், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 21-ந் தேதி முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். 

இதைமுன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புபேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. 

இந்நிலையில் கடைசி நேர பயணம் மற்றும் குறித்த நேரத்தில் சொகுசு பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் ஆம்னி பேருந்தை தேர்ந்தெடுத்து செல்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தற்போது, இதற்கான முன்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வருகிற 21-ந்தேதி பயணத்திற்கு ஆம்னி பேருந்துகளில் பயணசீட்டு முழுவதும் முடிந்து விட்டன. சில பேருந்துகளில் மட்டும் ஒரு சில இருக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. 

இதனால், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் அனைத்து பேருந்துகளும் நிரம்பி விட்டன. இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ. 3 ஆயிரம் முதல் 3,500 வரை கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepavali festival amni bus ticket high


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->