இவிகேஎஸ் இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
Defamation case cancelled against EVKS Elangovan
இவிகேஎஸ் இளங்கோவன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா குறித்து, சில கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
இந்த கருத்துகள் குறித்து, இ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், இ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசவில்லை என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர் இளங்கோவன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
English Summary
Defamation case cancelled against EVKS Elangovan