அவதூறு வழக்கு: ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக உத்தரவு!  - Seithipunal
Seithipunal


ஈரோடு, திருநகர் காலனியில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13 தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்தும் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

அவரது பேச்சுக்கு அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து சீமான் மீது எஸ் சி., எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரானார். 

வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான விசாரணை வந்தபோது எதிர்பாராத விதமாக சீமான் இன்று ஆஜராகவில்லை. 

சீமான் தரப்பு, அவருக்கு மருத்துவ பரிசோதனை இருப்பதால் அவரால் இன்று ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தது. 

மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து வழக்கை விசாரணை செய்த நீதிபதி வருகின்ற 30ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defamation case Seaman appear Erode Principal Court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->