திருப்பூர் மாநகராட்சியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்.!
Delay in counting votes
திருப்பூர் மாநகராட்சியில் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தாமதமாகி உள்ளது.
திருப்பூர்மாநகராட்சியில் முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்க 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதாமாகியுள்ளது.
அங்கு, தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டுமென, அதிமுக வலியுறுத்தி இருந்தது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டும், நீண்ட நேரமாக மின்னணு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கைக்காக வெளியே எடுத்து வரப்படவில்லை. இதனால், வாக்கு எண்ணிக்கை கால தாமதமானது. மண்டலம் வாரியாகவும், வார்டு வாரியாகவும் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு, அதனை எண்ணி முடித்த பிறகே முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.