தேனி : அரசு மருத்துவமனையில் டெல்லி மருத்துவ குழுவினர் திடீர் ஆய்வு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தேனி மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை பிரிவு தொடங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்தது. 

இந்த ஒப்புதலைத் தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.50 கோடியில் மூன்று தளங்களில் தனித்தனி பிரிவுகள், 50 படுக்கை வசதி கொண்ட ஆயுர்வேத ஒருங்கிணைந்த சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது. இருப்பினும், இந்த கட்டிடம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படவில்லை. 

இந்நிலையில் இந்த கட்டிடத்தை டெல்லி ஆயுர்வேத அமைச்சக இயக்குனர் ரகு, இந்திய ஹோமியோபதி மருத்துவ இணை இயக்குனர் பார்த்திபன் உள்ளிட்டோர்  தலைமையிலான மருத்துவகுழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இதையடுத்து, ஆயுர்வேத ஒருங்கிணைந்த சிகிச்சை பிரிவு கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக மருத்துவ கல்லூரி மருத்துவருடன் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்தினார்கள். 

இது தொடர்பாக டெல்லி மருத்துவ குழுவினர் தெரிவித்ததாவது, "இந்த கட்டிடம் குறித்து அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும். அரசிடம் உத்தரவு பெற்று ஆயுர்வேத ஒருங்கிணைந்த சிகிச்சை பிரிவு கூடிய விரைவில் திறக்கப்படும்" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Medical Team visit in theni medical college hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->