அதிமுக டெல்லி உயர்நீதிமன்ற வழக்கில் திடீர் திருப்பம்! அதிர்ச்சி அறிவிப்பு! முடிவு தலைமை நீதிபதி கையில்! - Seithipunal
Seithipunal



அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்தும் உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். 

மேலும், இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

இத்தடக்கிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலுடன் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். இதில் எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. 

மேலும், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிட, டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இதுகுறித்த அவரின் ரிட் மனுவில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, இணையத்தில் பதிவிட உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த ரிட் மனுவை ஏற்றுக்கொண்டுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், இன்று மதியம் 2 மணிக்கு விசாரணை செய்தது. அப்போது, 
டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஏன் ரிட் மனுவை தாக்கல் செய்தீர்கள்? என அதிமுகவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு, கட்சி விவகாரம் தொடர்புடைய விசாரணை இந்த நீதிமன்றத்தில் நடைபெறுவதால் மனு தாக்கல் செய்யப்பட்டதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ஈபிஎஸ் தரப்பு ரிட் மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி பிரதீபா எம்.சிங் விலகுவதாக அறிவித்துள்ளார். 

ஈபிஎஸ் ரிட் மனுக்களை யார் விசாரிப்பார் என்பதை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DelhiHighCourt ADMKCase Prathiba M Singh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->