தமிழகத்தில் 4 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு - அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கொசுக்களின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த கொசுக்கள் கடித்து 5 அல்லது 10 நாட்களுக்குப் பிறகு தலைவலி, காய்ச்சல், எலும்பு வலி, அசௌகரியம், உடல் அசதி, கண்கள் சிவந்து போதல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும்.

இந்த டெங்கு கொசு பகலில் தான் மனிதர்களைக் கடிக்கும் என்பதால், காலை நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற கொசுக்களைப் போன்று இல்லாமல் டெங்கு கொசுவை எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விட முடியும். 

அதாவது உருவத்தில் பெரியதாகவும் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் அதிகளவில் கோடுகள் இருக்கும். இந்தக் கொசுக்களின் முட்டைகள் தண்ணீர் தேங்கும் இடத்தில் உற்பத்தியாகும் என்பதால், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள தேவையில்லாத பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்.

இந்த நிலையில் தான், சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த டெங்கு பரவலை கட்டுக்குள் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், உயிரிழப்புகள் கட்டுக்குள் இருப்பதாகவும், கடலூர், சென்னை, தஞ்சாவூர் மாவட்டங்களில் எலிக் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dengue attack to four districts minister m subramanian info


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->